Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி”.. எப்படியும் எங்கும் நடக்கலாம்- தமிழிசையின்  அதிரடி பதில்!!

"ADMK-BJP alliance again".

"ADMK-BJP alliance again".

ADMK BJP: அதிமுக வுடன் கூட்டணி வைப்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் .
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதற்கு உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர் கேட்டதற்கு
 ” தேர்தல் வரும் பொழுது எதுவும் , எப்படியும் , எங்கும் நடக்கலாம் “
என ஒரு வித உட்கருத்துகளைக் கொண்டுக் கூறும் பதிலானது மழுப்புவதைப் போல் உள்ளது.
அதுமட்டுமின்றி, தற்பொழுது திமுக ஆட்சியின் போது நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு கூடக் கிடைக்காது என்பது சரியில்லை, தீபாவளி வருகிற நேரத்தில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தால் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பை விநியோகம் செய்யமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு இப்பொழுது எங்களது வேலை எங்கள் கட்சியில் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது மட்டுமே என்றும் கூறியுள்ளார்.ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தமிழில் மொழிப் பெயர்க்கும் பணியையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
Exit mobile version