“அதிமுக பாஜக” முடிவுக்கு வரப்போகும் மோதல்.. கை மாறும் பதவி!! இனி அண்ணாமலை இல்லை!!
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்தே அரசியல் சார்ந்த படிப்பிற்காக அண்ணாமலை வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது. அவ்வாறு செல்லும் பொழுது அவரது பதவியில் யார் அமர்த்தப்படுவார் என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் உள்ளது. குறிப்பாக அண்ணாமலை யின் பேச்சு முரண்பாடாக இருப்பதால் கட்சிக்கு மட்டுமின்றி கூட்டணி கட்சியில் இருப்பவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதை மக்களவைத் தேர்தலிலும் இந்த இடைத்தேர்தலிலும் நன்றாகவே பார்க்க முடிகிறது.
இவரின் பேச்சாலே மக்களின் வாக்குகளை இழக்க நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டு உட்கட்சி நிர்வாகிகளிடமே உள்ளது. குறிப்பாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது முதல் தற்பொழுது நடந்து முடிந்த விக்கிரவாண்டி தேர்தலில் பாமக பின்னடைவை சந்தித்தது வரை அனைத்திற்கும் இவரின் முறையற்ற பேச்சு தான் காரணம். இவருக்கு திமுகவுடன் மறைமுக தொடர்பு உள்ளது என்றும் அதனால் தான் சமீப காலமாக இவர் பக்குவமற்று நடந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இவர் ஆறு மாத காலம் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது இதனை பாஜக தன்வசம் படுத்திக் கொள்ள விரும்புகிறது. அதாவது அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்கவும் திட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர். அவ்வாறு செய்யும்பொழுது பாஜகவின் வாக்கு சதவீதம் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகரிக்கும். இதற்காக வானதி சீனிவாசன் அல்லது தமிழிசை சௌந்தர்ராஜன் இருவரில் ஒருவரை முன்னிறுத்த கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தமிழிசையை தமிழக மாநில பாஜக தலைவராக அமர்த்தும் பொழுது அதிமுகவுடன் கட்டாயம் கூட்டணி அமைத்து விடுவார் அதற்கான வியூகம் அனைத்தையும் இவர் வகுக்கும் படி தான் இவரின் செயல்பாடுகள் இருக்கும் என கூறுகின்றனர். அப்படி கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் நிரந்தரமாக தமிழக பாஜக மாநில தலைவராக தொடர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இது அனைத்தும் நடக்கும் பட்சத்தில் அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படலாம் அல்லது வேறு ஏதாவது பதவி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாம்.