ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.அவரது மனைவி விஜயலட்சுமி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவரின் உடல்நிலையில் கவனம் செலுத்தி வந்தார்.
மறைந்த விஜயலட்சுமி அவர்களுக்கு வயது 66.இவரின் மறைவுக்கு பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது இரங்கலை ஒபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்தார்.அடுத்து அதிமுக தலைவரும் சட்ட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார்.மேலும் தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு,துரைமுருகன்,தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.குடல் இறக்கம் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த இறப்பானது தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மற்றும் மருத்துவர்களிடம் அவரின் மனைவியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தது குறிப்பிடத்தக்கது.இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.