வீட்டிற்கு விரைந்த அமைச்சர்கள்! கெத்து காட்டிய விஜயகாந்த்!

0
155

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சி இன்னும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், பாமக, தேமுதிக,ஆகிய கட்சிகள் உடனான கூட்டணியை உறுதி செய்ய அதிமுக சென்ற சில தினங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சென்ற 22 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு போய் சந்தித்த, அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பாமகவிற்கு எத்தனை சீட்டுகள் வேண்டும் என்பது தொடர்பாக விவாதித்ததாக தெரியவருகின்றது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்கும், அமைச்சர்கள் தயாராகி இருக்கிறார்கள். தேமுதிக பொருளாளரான பிரேமலதா எதிர் வரும் சட்டசபை தேர்தலில் தனியாக நிற்க வேண்டும். என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த ஆட்சியில் நிறையும் இருக்கின்றது. குறையும் இருக்கின்றது என்று தெரிவித்தார் பிரேமலதா.

அதிமுக கூட்டணியில் தங்களுடைய சீட்டு எண்ணிக்கை அதிகமாக்கவே அந்தக் கட்சி இவ்வாறு அவ்வபோது பேசி வருகின்றது என்பதை ஆளும் தரப்பும் உணர்ந்து இருக்கின்றது. இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் சந்திப்பிற்கு பின்னர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவை சந்திக்க அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி ,ஜெயக்குமார், ஆகியோர் நேரம் கேட்டிருந்தார்கள்.

2011ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் வாங்கி 29 தொகுதிகளில் வென்றது தேமுதிக. 2016 ஆம் ஆண்டில் மக்கள் நல கூட்டணியில் 104 தொகுதிகளில் போட்டியிட்டது அந்த கட்சி. அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளுக்கு மிகாமல் வாங்க கூடாது என்ற முடிவில் இருந்து வருகின்றது அந்த கட்சி. ஜெயலலிதா இருந்த பொழுது 41 தொகுதிகள் பெற்ற காரணத்தால், அதிலிருந்து ஒரு தொகுதி கூட குறைந்து விடக்கூடாது என்பது அந்த கட்சியின் கணக்கு, ஆனால் அதை உடனடியாகவே மறுத்துவிட்டது ஆளும் தரப்பு.

இன்னொரு புறம் தேமுதிகவிற்கு ராசியான எண் என்று 5 அல்லது ஒன்பது போன்றவை இருக்கின்றதாம். அதனால்தான் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகளை விடாப்பிடியாக கேட்டதாம் அந்த கட்சி. ஆனால் அதிமுக நான்கு தொகுதிகளை தான் தந்திருக்கின்றது.

இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, 36 தொகுதிகள் அல்லது 32 தொகுதிகள், அதோடு சேர்த்து ஒரு ராஜ்யசபா சீட் அதோடு தேர்தல் செலவுகளையும், அதிமுகவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக விஜயகாந்திடம் நேரடியாகவே சென்று கொடுக்க வேண்டிய வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, கூட்டணியை உறுதி படித்துவிட்டு வாருங்கள் என்று அமைச்சர்கள், தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் பொறுப்பை கொடுத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த வகையிலே, டிசம்பர் மாதம் 23-ஆம் தேதியே விஜயகாந்த் இல்லத்திற்கு செல்வதற்காக நேரம் வாங்கிவிட்டார்கள். ஆனாலும் அன்றைய தினம் திடீரென்று ஒரு சில வேலைகள் இருந்த காரணத்தால், இரவு வரலாமா என்று விஜயகாந்த் இல்லத்தை தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் விஜயகாந்த் மாத்திரைகளை போட்டு கொண்டு உறங்கிவிட்டார் நாளைக்கு வாருங்கள் என்று தெரிவித்து விட்டார்கள்.

அதற்கு அடுத்த நாள், 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு தினம் என்ற காரணத்தால், அன்றைய தினம் அனேக நிகழ்ச்சிகள் அமைச்சர்களுக்கு இருந்த காரணத்தால், டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜயகாந்த் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார்கள். அமைச்சர்கள் என்று அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.