டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச்சதி!

0
290
Edappadi Palanisamy vs MK Stalin

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச் சதி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (07.05.2020) முதல் தமிழக அரசு நடத்தி வரும் மதுக் கடைகளான டாஸ்மாகை சென்னை தவிர்த்து இதர ஊர்களில் திறக்கவிருப்பதாக ஆளும் அதிமுக அரசு அறிவித்தது. அவர்களின் இந்த முடிவுக்கு கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பொதுமக்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி மற்றும் திமும தலைவருமான முக ஸ்டாலின் தனது இல்லத்தின் முகப்பிலேயே கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சிக்காரர்களும், கூட்டணி கட்சியினரும் அதே பாணியில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதிமுக அரசு டாஸ்மாக்கை திறக்கப் போவதாக அறிவித்தவுடனேயே, திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில். ஸ்டாலினுக்கு, உண்மையாக மக்கள் மீது அக்கறை இருந்தால், திமுக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா, என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியிருந்தார். இதே தொனியில் அதிமுகவைச் சேர்ந்தவர்களும், இன்னும் பிற மக்களும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது குறித்து நாம் டாஸ்மாக்கின் அதிகார்வபூர்வ வலைத்தளத்தில் ஆராய்ந்த போது கீழ்க்கண்ட மது ஆலைகளிலிருந்து தான் மதுக்களைக் கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

 Suppliers  
 DISTILLERIES  
Sl.No.Name of the DistilleriesLocation of the Manufacturing UnitPhone No.
1ENRICA ENTERPRISES PVT. LIMITEDNo.5, Bye Pass Road, Poonamallee, Chennai 600 05628202555
2MOHAN BREWERIES & DISTILLERIES LIMITEDNo.112, M.M. Nagar, Valasaravakkam, Chennai 600 08728291238
3SHIVA DISTILLERIES LIMITED45, Mettupalayam Road, Narasimha Naicken Palayam, Coimbatore 641 03128474300
4EMPEE DISTILLERIES LIMITEDMevaloorkuppam Village, Sriperumbudur Taluk, Kancheepuram Dist. 602 10528522510
5SOUTHERN AGRIFURANE INDUSTRIES LIMITED (SAFIL)Valuda Reddy Village, Villupuram District 605 60228475967
6MIDAS GOLDEN DISTILLERIES PVT. LIMITED2/207, Padappai, Pushpagiri Road, Sirumathur Village, Sriperumbudur Taluk, Kancheepuram Dist. 601 30128216465
7ACCORD BREWERIES AND DISTILLERIES LTDNathanallur Village, Kancheepuram Taluk & District 631 60528344195
8SNJ DISTILLERS PVT. LTD.56/1, Kallapiranpuram Village & Post, Madurantagam Taluk, Kancheepuram District 603 30824320706
9KALS DISTILLERIES PVT. LTD.Kallakkottai Village, Gandarvakottai Taluk, Pudukottai District 622 30224345254
10GOLDEN VATS PVT. LTD.Karnavur Village, Mannargudi Taluk, Tiruvarur District 614 01464524144
11KALS BEVERAGES PVT. LTD.SF.No.103/2, Mavuthampathi Village, Navakkarai (Post), Coimbatore 641 10528110187
 BREWERIES  
Sl.No.Name of the BreweriesLocation of the Manufacturing UnitPhone No.
1UNITED BREWERIES LTD. (ARANVOYAL)Mount Tiruvallur High Road, Aranvoyal Village, Thiruvallur District 602 02527621187
2MOHAN BREWERIES & DISTILLERIES LTD.No.112, M.M. Nagar, Valasaravakkam, Chennai 600 08728291238
3UNITED BREWERIES LTD. (KUTHAMBAKKAM)788/2, Kuthambakkam, Thirumazhisai, Thiruvallur District 602 10726811154
4SNJ BREWERIES LTD.,23, Moosivakkam, Padalam Kootu Road, Madurantagam Taluk, Kancheepuram District 603 30824320616
5KALS BREWERIES PVT. LTD.,Kunnathur Village, Illapur Taluk, Pudukkottai District.24345264
6APPOLLO DISTILLERIES PVT. LTD.,Billakuppam Village, Sidharaja Kandigai Post, Gummidipoondi Taluk, Thiruvallur District 601 20127997267
7ACCORD BREWERIES AND DISTILLERIES LTDElayanarvellore village, Kancheepuram Taluk,28346506

மேற்குறிப்பிட்டவற்றை இந்த இனைய முகவரியில் சரி பார்த்துக் கொள்ளலாம் : https://www.tasmac.co.in/suppliers.php

இதில் கோல்டன் வாட்ஸ் மற்றும் எலைட். இந்த இரண்டு ஆலைகளும் திமுக பிரமுகர்களான டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாகும். மேலும் எஸ்என்ஜே, கால்ஸ் மற்றும் இம்பெரியல் திமுகவிற்கு நெருக்கமான பிரமுகர்கள் நத்தும் மது ஆலைகளாகும்.

எனவே ஸ்டாலின் ஓர் அறிக்கை விட்டால் இதனை மூட செய்துவிடலாம் என அதிமுகவும், திமுகவின் மது ஆலைகளிலிருந்து அதிமுக அரசு ஏன் மது கொள்முதல் செய்ய வேண்டும் என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்று உலா வருகிறது அது இவ்வாறு செல்கிறது :-

“மது உற்பத்தி ஆலைகள் எல்லாம் திமுகக்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டு வருவானுக பாருங்களேன்!

மது உற்பத்தி நிறுவனங்கள் திமுகவுக்கு சொந்தமானதா!!!???

சென்னை டிஸ்ட்ல்லரீஸ்…

இந்த மது ஆலை உரிமையாளர் பெங்களூரு தொழிலதிபராம்..! அவர் யார் தெரியுமா ? நம்ம விஜய் மல்லையா தாங்க…!! அவர் பெயரை குறிப்பிட மாட்டார்கள் ஊடக முதலாளிகள். திமுக என்றால் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்..!

சென்னை டிஸ்ட்ல்லரீஸ், யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்…..

இந்த இரண்டு நிறுவனங்களும் விஜய் மல்லையாவுக்கு சொந்தமானவை. இதில் யுனைட்டட் ஸ்ப்ரிட்ஸ் 1862 ல் மெக்டவல் என்ற ஆங்கிலேயரால் சென்னை ஜார்ஜ் கோட்டைக்குள் துவங்கப்பட்டது. மது மற்றும் சிகரெட் தயாரிப்பு பிரதான தொழில். இந்த ஆலையை இந்திய சுதந்திரத்திற்கு பின் வாங்கியவர் விட்டல் மல்லையா. அவரின் இறப்புக்குப்பின் ஆலைக்கு பொறுப்பேற்றவர் நம்ம பிளே பாய் விஜய் மல்லையா. விஜய் மல்லையாவுக்கும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கும் பல கொடுக்கல் வாங்கல்கள், அந்தப்புர இரகசியங்கள் நிறையவே உண்டு..!

மோகன் புருவரீஸ்…..

இந்த நிறுவன அதிபர் யார் என்றால் மருத்துவக்கல்லூரி உரிமையாளராம்..!! ஏன் அதை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி முதல்வர் ராமச்சந்திரா உடையார் & கோ என்று சொல்லக்கூடாதா..? சொன்னால் எம்.ஜி.ஆர், சுப்பிராம ரெட்டி என்ற ஆந்திர தொழிலதிபர் ( முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் காட்பாதர் ) இப்படி பல தொடர்புகள் வெளியே வருமல்லவா..?

ராமச்சந்திர உடையாரின் உறவினர் மாசிலாமணி நந்தகோபால், அவர் மகன்கள் அரவிந்த் நந்தகோபால், நடராஜன் நந்தகோபால் மற்றும் நடராஜன் நந்தகோபாலின் மனைவி ஷோபா ஆகியோர் நிர்வாகத்தில் உள்ள மோகன் புருவரீஸ்க்கு, ப்ரூடண்ட் டிஸ்டில்லரீஸ் மற்றும் கலிபோர்னியாவில் நந்தா ஒயின்ஸ் ஆகிய மது தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

எம்பி புருவரீஸ்……

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பி.புருஷோத்தமன். புருஷோத்தமனின் குடும்பம் நீண்ட காலமாகவே சர்க்கரை மில்களையும், மதுபான ஆலைகளையும் நடத்திவரும் குடும்பமாகும்.

புருஷோத்தமனுக்கு ஷாஜி என்றொரு மகன் உண்டு. அவர் மது போதையில் கார் ஒட்டி சென்னை அமைந்தகரையில் சிலர் மீது காரை ஏற்றியதில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்து விட ஷாஜியின் டிரைவர் தான் தான் காரை ஒட்டியதாக போலீசில் சரணடைய , உண்மை குற்றவாளி ஷாஜி மலேசியாவில் தஞ்சமடைய அவரை இண்டர்போல் போலீசார் கைது செய்ததாக தகவல் கிடைக்கிறது.

அப்பல்லோ……

இந்த நிறுவனம் , அப்போலோ டயர் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. அதன் தலைவர்களான ஓம்கா கன்வார் மற்றும் நீரஜ் கன்வார் எப்படி திமுக கட்சிக்கு தொடர்புள்ளவர்கள் என்று புரியவில்லை..!

எலைட் டிஸ்ட்லரீஸ் மற்றும் ஏஎம் புருவரீஸ்…….

இந்த நிறுவனங்களின் உரிமையாளர் ஜெகத் ரட்சகன். இவர் எம்.ஜி.ஆர். சாகும்வரை அதிமுகவில் இருந்து ஆர்.எம்.வீரப்பனின் வலது கரமாக செயல்பட்டவர். இவரின் எந்த தொழில் முன்னேற்றமும் திமுக வால் வந்ததில்லை, அதிமுகவில் இருந்த போதே வந்தவை..

கால்ஸ் டிஸ்டில்லரீஸ்……

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன். காரைக்கால் பகுதியில் இயங்கும் ஜி.என்.எஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கால்ஸ். வாசுதேவன் குடும்பம் மது விற்பனையில் நீண்ட அனுபவம் உள்ள குடும்பம். காங்கிரஸ் கட்சியோடு தொடர்பில் இருந்த வாசுதேவன் 2006 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையில் அவர் நிறுவனத்தை திமுக வுடன் முடிச்சு போடுகின்றனர்..! கால்ஸ் நிறுவனம் விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்ப்ரிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவுட்சோர்சிங்க் முறையில் அந்நிறுவனத்துக்கு மது உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது போக தங்களுக்கென்று தனி மது வகைகளையும் தயாரித்து விநியோகம் செய்கிறது..!

இம்பிரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிட்டட்……

கோவையில் இயங்கும் இந்த மது ஆலையின் உரிமையாளர் தரணிபதி ராஜ்குமார். தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மருமகன்..! திமுக ஆட்சியில் தரணிபதி ராஜ்குமாரின் தந்தை கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதாம்..! அதனால் இந்த ஆலையை திமுக கணக்கில் சேர்க்கின்றனர்..! பொள்ளாச்சி மகாலிங்கம் யார் ..? எந்த கட்சி என்பது ஊரறிந்த ரகசியம்..!! தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலமாக இருந்தவர்..

சிவா டிஸ்டில்லரீஸ்……..

இந்த நிறுவனம் கோவையை சேர்ந்த பண்ணாரி அம்மன் குரூப் நிறுவனங்களுக்கு சொந்தமானது..! பண்ணாரி சர்க்கரை, நிதி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தும் பாலசுப்பிரமணியம் சரவணன்தான் சிவா டிஸ்ட்டில்லரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்..!

மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்……

அதிமுக வின் முன்னாள் போதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை சசிகலாவுக்கு சொந்தமானது என்று சொல்வார்கள். ஆனால் சசிகலாவை ஜெயலலிதா சில காலம் விலக்கி வைத்திருந்த போது மிடாஸ் மது ஆலையின் மேலாண்மை இயக்குனர் பாதவியை துக்ளக் சோ விடம் கொடுத்து வைத்தார் ஜெயலலிதா..! அந்த ஆலை சசிகலாவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்திருந்தால் சசிகலா மீது வெறுப்பை உமிழும் சோவை எப்படி மேலாண்மை இயக்குனராக ஜெயலலிதாவால் நியமிக்க முடியும்..!

பொதுவாகவே சாராய கடைகள் ஏலம் என்றாலும், மது உற்பத்தி ஆலைகள் என்றாலும் அது அதிமுக தான். ஆனால் நம்மூர் ஊடகங்கள் மது ஆலைகள் திமுகவுக்கு சொந்தமானது என்று கட்டிவிட்ட கதைக்கு றெக்கை முளைத்து பறந்து கொண்டிருக்கிறது!” என நிறைவடைகிறது.

இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு ஒன்று புரியும். அதிமுக, திமுக இவை இரண்டில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் ஒருவரை ஒருவர் வசை மாறி பொழிந்தாலும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக் கொள்வதில் தான் மும்முரமாக இருக்கின்றனர்.

இதில் பாவம் திருவாளர் பொதுஜனமாகிய நாம் தான்.