தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

0
304
ADMK doesn't even know why they are contesting the elections!! Anbumani Ramdas speech!!

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார். 

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மக்களவை தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஸ்டாலின் அவர்களை ஆதரித்து மக்களிடையே பேசி வாக்கு சேகரித்தனர். அப்பொழுது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பாமக கட்சி இல்லாமல் இருந்திருந்தால் இன்று டெல்டா என்பது ஒன்று இல்லாமலேயே போயிருக்கும். 

57 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. டெல்டாவை அழிக்கப் பார்த்த கட்சிகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

டெல்டாவை அழிக்கப் பார்க்கும் கட்சிகளுக்கு மத்தியில் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக கட்சி தான் வலியுறுத்தி வந்தது. மேகதாது அணை விவகாரம் பேசப்பட வேண்டிய ஒன்று. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் நம்முடைய தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. 

மக்களவை தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்பது கூட தெரியாமல் அதிமுக கட்சிக்கே தெரியாத சூழலில் போட்டியிடுகின்றது. பாமக வேட்பாளர் ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றால் பிரதமர். நரேந்திர மோடி அவர்களை நேரடியாக சந்தித்து பேசி பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.