Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்‌.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை எம்ஜிஆர் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

Exit mobile version