Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் தாய்க்கே இந்த நிலையா? பிரசாரத்தில் கண்கலங்கிய முதல்வர்! உருக்கமான வீடியோ!

edappadi palaniswami

edappadi palaniswami

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, ஸ்டாலின் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு 300 நாட்கள் கழித்து முறையாக பிறந்த குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என படு கொச்சையாக பேசினார்.

ஆ.ராசாவின் ஆபாச பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பல்வேறு காவல்நிலையங்களில் எச்.ராஜா மீது அதிமுகவினர் புகார் அளித்து வருகின்றனர். அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவர் இனி வரும் காலங்களில் எந்த விதமான தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட கூடாது என நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மெளன் காத்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று சென்னை திருவொற்றியூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பேசியதாவது: ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவானாலும் பேசுவார்களா?. இந்த மாநிலத்தின் முதல்வருக்கே இப்படியொரு நிலை என்றால், உங்களைப் போன்ற சாமானிய மக்களை யார் பாதுகாப்பது.

இப்படிப்பட்ட அராஜக திமுகவின் கையில் கொடுத்தால் தாய்மார்களின் நிலை என்னவாகும்?. தாய்மார்களை கொச்சைப்படுத்தியவர்களுக்கு தக்க தண்டனை கொடுங்கள். ஏழை, பணக்காரர்கள் எல்லாருக்கும் தாய் தான் உயர்ந்தவர். என் தாயை இழிவாக பேசியவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பார். என் தாய் கிராமத்தில் வளர்ந்தவர், இரவு பகல் பாராமல் உழைத்த விவசாயி. அவரைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள் என சொல்லும் போதே முதலமைச்சர் கண் கலங்கி குரல் தழு, தழுக்க ஆரம்பித்தார். இந்த சம்பவம் அதிமுகவினரை கொதிப்படையச் செய்துள்ளது .

Exit mobile version