Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார்.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கேட்டதற்கு செல்லூர் ராஜூ மட்டுமல்ல அதிமுகவின் சாதாரண தொண்டனை விமர்சித்தால் கூட எதிர்விமர்சனங்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

பாஜக தேசிய தலைமையும், அதிமுகவின் தலைமையும் கலந்து பேசி கூட்டணியானது சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது.இந்நிலையில் அண்ணாமலை இவ்வாறு பேசுவது சரியல்ல. அதிமுகவை தொட்டார் கெட்டார் என அண்ணாமலைக்கு நன்றாகவே தெரியும் என்று அவரை எச்சரிக்கும் வகையில் அவர் பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் செல்லூர் ராஜூ மட்டுமல்ல சாதாரண தொண்டர்களை விமர்சித்தாலும் அதற்கான எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இந்த சூழ்நிலையை அண்ணாமலை உருவாக்க மாட்டார் என்று நம்புகிறோம் என்றும் அவர் அப்போது கூறினார்.

Exit mobile version