Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவிற்கு தாவிய அதிமுகவின் முக்கிய நிர்வாகி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட இருவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள்.

அந்த சமயத்தில் திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வஹாப், தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன், பூச்சி முருகன், திருநெல்வேலி மாநகர செயலாளர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், பகுதி செயலாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்து இருக்கிறார்கள்.

Exit mobile version