Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறப்பான ஆட்சி முதலமைச்சருக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் தலைமை!

திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த கட்சி செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து அதில் இருக்கின்ற குறை நிறைகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி வருகிறது அந்த கட்சியின் தலைமை.

அதோடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி திமுக சார்பாக செய்யப்படும் ஒவ்வொரு செயல்களிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான குறை. நிறைகளையும் மிக நுட்பமாக கவனித்து அதில் இருக்கக்கூடிய குறை நிறைகளை தெரிவித்தும், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வருகிறார்.
இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திமுக அதிமுகவை பார்த்து சற்று பயந்து கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.

ஆனால் தற்சமயம் அதிமுக தலைமை அதிர்ச்சி அடையும் அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த கட்சியின் தலைமை மிகப்பெரிய விரக்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.அதாவது தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன். இவர் தற்சமயம் அதிமுகவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பைத்தியத்தின் மிக நெருங்கிய ஆதரவாளர் என்றும் இவரை குறிப்பிடுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் பரசுராமன் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக புகார் தொடர்ச்சியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பரசுராமன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நான் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து யாரிடமும் பணம் வாங்கவில்லை. என்மீது தேவையில்லாத அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதோடு மக்களாட்சித் தத்துவத்தின் படி அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலின் படியும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி மிகச் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்த நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அவர் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். அதனை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் காரணமாக, நானும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியை இவ்வாறு பாராட்டும் விதமாக அவர் பேசியிருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Exit mobile version