கேரள சட்டசபையில் கால் பதிக்கவிருக்கும் அதிமுக! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

0
150

தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த மாதம் தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்கு வங்கம், அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அந்த விதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆகிய 3 மாநிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அதேபோல புதுச்சேரியிலும் கேரளாவிலும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து அதிமுக சார்பாக கேரளா மாநிலத்தின் மன்னார்காடு, தேவிகுளம், ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுகவின் தலைமை வெளியிடுகின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, அதிமுக தலைமை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் படி கேரளா மாநில சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர்களாக தேவிகுளம் சட்டசபைத் தொகுதியில் ஆர் எம் தனலட்சுமி அவர்களும், மன்னார்காடு சட்டசபைத் தொகுதியில் பி நசீமா அவர்களும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.