Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்டம் திடீர் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்ட பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திமுக அரசை கண்டித்து டிசம்பர் மாதம் 9ம் தேதியான தினம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், எதிர்வரும் 11 ஆம் தேதி காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தமிழக அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளம் பாதித்த பொது மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிட வேண்டும், மழை வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகி பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இன்றைய தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த இந்த போராட்டம் திடீரென்று தள்ளிப்போய் இருப்பதற்கு ஒரு சில முக்கிய காரணங்களும் இருக்கிறது. அதாவது இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது, அதே நேரம் தமிழகத்தில் எதிர்பாராமல் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பலியாகியது நாடு முழுவதையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் பிபின் ராவத் அவர்களின் உடல் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. அதே நேரம் நாளை காலை 11 மணி அளவில் அவருடைய இல்லத்தில் பிபின் ராவத் உடல் வைக்கப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சி என்ற முறையில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் உடலுக்கு செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்வதற்காகவும், இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version