Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை கிட்டதட்ட முடிந்த நிலையில், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதிமுகவை பொறுத்தவரை பிற கட்சிகளை விட தங்களுடைய தேர்தல் அறிக்கை தனித்துவமானதாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் மணியன், கோகுல இந்திரா, ஜேசிடி பிரபாகர், அன்வர் ராஜா, வேணுகோபால் ஆகியோர் தலைமையில் மிகப்பெரிய குழு அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த குழு அந்த அறிக்கையை ஓபிஎஸ் – இபிஎஸ் வசம் ஒப்படைந்தனர்.

இதனிடையே நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். ஏற்கனவே ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என பெண் வாக்காளர்களை குறிவைத்து எடப்பாடியார் ஏகப்பட்ட அறிவிப்புகளை அள்ளி வீசியிருந்தார்.

அந்த வரிசையில் தேர்தல் அறிக்கையில் பெண்கள் மனதை குளிர வைக்கும் பல சிறப்பான தரமான வாக்குறுதிகளை அதிமுக இணைத்துள்ளது. அவை எல்லாம் என்னவென்று பார்க்கலாம்.

1.மகளிர் நலன் காக்க குல விளக்கு திட்டம்
2.மகளிருக்கு பேருந்தில் பயணச்சலுகை
3.வாழ்வாதாரத்திற்கு உதவியாக ஆண்டிற்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர்கள்
4.அனைவருக்கும் சூரியசக்தி சமையல் அடுப்பு
5.அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம்
6.மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக உயர்வு
7.மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு
8.பெண் பிள்ளைகள் பாதுகாப்பு நிதி திட்ட நிதியுதவி உயர்வு
9.பெண்களின் பாதுகாப்பிற்கு அனைத்து நகரங்களிலும் காவலன் செயலி
10.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் மகளிர் வங்கி
11.சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்க ஆன்லைன் வசதி
12.பெண்களுக்கான அரசு வேலை

Exit mobile version