அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு 

0
116
ADMK

அதிமுக சார்பாக 3 முறை எம்பியாக பதவி வகித்த பிரபலம் மறைவு

அதிமுக சார்பாக போட்டியிட்டு ஒரே தொகுதியில் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மாயத்தேவர் உடல்நலக் குறைபாடு காரணமாக காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் மாயத்தேவர்.  எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டில் தனிக்கட்சியாக அதிமுகவை தொடங்கியவுடன் முதன் முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார்.

அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் அமோக வெற்றி பெற்றார்.இதனைத்தொடர்ந்து அவர் ஒரே தொகுதியில் போட்டியிட்டு 1973-77, 1977-80, 1980-84 என தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AIADMK first MP Mayadevar passed away today at dindigul

இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை பாராட்டி அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி, இவரை தன்னுடைய ‘மூத்த மகன்’ என்றேஅழைத்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய ‘உடன் பிறந்த சகோதரர்’ என்று இவரை பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரை ‘பாராளுமன்றத்தின் சிங்கம்’ என்று அழைத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவரை ‘பாராளுமன்றத்தின் பீரங்கி’ என்று அன்றைய கால கட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பாராட்டி பேசியுள்ளார். 88 வயதாகிய இவர் தனது இல்லத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

இதனையடுத்து சின்னாளப்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.