சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அடைந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் குதிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், சசிகலா அரசியல் பிரவேசம் எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னைக்கு வருகை தந்த உடன் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.
இதற்கிடையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சசிகலா உரையாடிய ஆடியோ ஒன்று வெளியானது அதில் தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள் நான் விரைவில் வந்து விடுவேன். அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார். சசிகலா அதேபோல நேற்று முன்தினம் வெளியான ஒரு ஏரியாவில் எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய இயலும் என்று இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரிடம் உரையாற்றியிருந்தார். ஆனால் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அதிமுகவிற்கு சசிகலா வர இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெளியிட்டிருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் தொண்டர்கள் விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல எம்ஜிஆர் மாநில கழக துணைச் செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கின்றது. ஒரு செய்தி குறிப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் கட்சியில் இருக்கும் வரை அதிமுக அழிவை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.