காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

0
128

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது அதிர்ச்சியை உண்டாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியில் இருந்த சமயத்தில் சிறுபான்மையினர் பிரிவின் கருத்துக்களை அதிமுக தலைமை செவிகொடுத்து கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை எடுத்து கூறியும் கேட்கவில்லை என்று அப்போது ஒரு தகவல் வெளியானது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் கீழ்மட்ட புலம்பல்கள் சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிமுகவைச் சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களில் ஒரு சிலர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. திமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது நோய் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அதிமுகவில் இருக்கின்ற சிறுபான்மையினர் பிரிவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.