Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் சரி என்று பேசிய திமுக எம்.பி கனிமொழியின் கருத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காகவும், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் திமுகவின் அத்தொகுதியின் எம்.பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றார்.

தூத்துக்குடிக்கு சென்ற திமுகவின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “அதிமுக ஆட்சியை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. எந்தக் காலத்திலும் இது செயல்படக் கூடிய ஆட்சியாக இருக்காது. தப்பித் தவறி நல்ல விஷயங்கள் நடந்தால் கூட, அது தனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று அமைச்சர் கூறக்கூடிய அளவிற்கு மோசமாக உள்ளது. ஆகவே ஆட்சி மாற்றம் மட்டும் தான் இதற்கு விடையாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதற்கு பதிலளித்த அவர், “ஆட்சி மாற்றம் வரும்போது தான் அனைத்திற்கும் தீர்வு வரும் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி சொல்லி ஓய்ந்து போய், தற்போது அவருடைய சகோதரி கனிமொழி சொல்ல ஆரம்பித்துவிட்டார். தற்போது அவர்களுடைய குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினை நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

நடந்து முடிந்த வேலூர் தேர்தலின் பிரச்சாரத்திற்கு ஏன் தங்களை அழைக்கவில்லை என்று கனிமொழி உள்ளிட்டோர் பிரச்சினை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை தான் தற்போது உள்ளது. கனிமொழி சொல்லும் மாற்றம் என்பது திமுக கட்சியில் வரப்போகும் மாற்றத்தைத் தான் சொல்கிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version