Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா வெளியே வரமாட்டார் வந்தாலும் நாங்கள் சேர்க்கமாட்டோம்! அமைச்சர்களின் அதிரடி பதில்கள்

தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, வதந்திகளை நம்ப வேண்டாம் சசிகலா வெளியே வரமாட்டார். அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி கேட்டபோது, இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு எடுத்த முடிவின் படி அதிமுக ஆட்சி செம்மையுடன் நடப்பதாக கூறினார்.

 

இதேபோல் விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமியை மையப்படுத்தியே எங்களுடைய அரசியல் இருக்கும் என்று தெரிவித்தார். இதேபோல் திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியில் அமைச்சர் வீரமணி பேசியபோது, சசிகலா வெளிவருவது பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

 

மேலும் அவர் வெளியே வந்தாலும் அதிமுகவில் சேர்க்கமாட்டோம். அவரை எதிர்த்துதான் நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றும், அவர் எப்போதும் எங்களுக்கு எதிரிதான் என்றும் எதிரியிடம் நாங்கள் எப்போதும் சரணடைய மாட்டோம் என்றும் கூறினார்.

Exit mobile version