Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாராயணனுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version