பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோகித்! ராஜ்பவனில் பாசமழை பொழிந்த எதிர்க்கட்சித்தலைவர்!

0
112

கடந்த 2017ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக பதவி வகித்து வந்தார். 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் ஒரு வருட காலம் பொறுப்பாளராக பதவி வகித்த வித்யாசாகர் கடந்த 2017 ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மட்டும் இருந்தார்.

இதனையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்சமயம் பஞ்சாப் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சண்டிகர் யூனியன் பிரதேச ஆளுநராக இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 2016ஆம் வருடம் அசாம் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித் கடந்த 2017ஆம் வருடம் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கேபி முனுசாமி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்றைய தினம் காலையிலேயே ராஜ்பவன் சென்று ஆளுநரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.