Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபையில் முதலமைச்சரை பாராட்டித் தள்ளிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பம்முகிறாரா அல்லது பாய்வாரா?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளிலிருந்து திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக பலவிதமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் வீட்டில் சோதனை அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வீரமணி அவர்களின் வீட்டில் சோதனை என்று அடுத்தடுத்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த கொடநாடு கொலை மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தம் இருப்பதாக வாக்குமூலம் வந்திருப்பதாக தெரிவித்து அவர் மீதும் தன்னுடைய பார்வையைத் திருப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் அவர்கள் மெல்ல , மெல்ல திமுக பக்கம் சாய தொடங்கினார். அப்போது சட்டசபையில் திமுகவிற்கு ஆதரவாக உரையாற்றுவது, அவர்கள் சொல்லும் ஒரு சில விஷயங்களை ஆமொபிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவர் மீது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கடுமையான கோபத்தில் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், இன்று பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றது இதனை முன்னிட்டு பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இனிவரும் காலங்களில் மகாகவியின் நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது கொடுக்கப்படும் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகத்தை மாணவ மாணவியர்களுக்கு வழங்குதல் பாரதியாரின் உருவச்சிலைகள் உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்தல் பாரதி தொடர்பான நிகழ்வுகளை பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்துதல் திரையில் பாரதி என்ற நிகழ்வுகளை நடத்துதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல், உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசு சார்பாக நிதி உதவி வழங்குதல் போன்ற 14 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் வெளியிடுகிறார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருக்கின்ற அவருடைய உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு தங்கம் தென்னரசு மற்றும் ஏ வ வேலு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவரும் மரியாதை செலுத்தினார்கள்.இந்த சூழ்நிலையில், பாரதியார் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்ததற்கு எதிர்க்கட்சித் துணைத் துணைத் தலைவர் ஓபிஎஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதாவது மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எல்லோரும் வரவேற்க தக்க ஒரு நிகழ்வாகும். தமிழின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திக் காட்டிய கவிஞர் மகாகவி பாரதியார் மொழிப்பற்று நாட்டுப்பற்று வாழ இயலும் என்பதை நிகழ்த்தி காட்டியவர் மகாகவி பாரதியார். பாரதி ஒரு பன்மொழிப் புலவர் ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி, என்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் என புகழாரம் சூட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

ஏழை மற்றும் அடிமை எனவும் எவனும் கிடையாது சாதியில் என பாடிய புரட்சிக் குயில் பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பாக கொண்டாடப்படும் என்பது போன்ற 14 அறிவிப்புகளை அதிமுக சார்பாக வரவேற்பதுடன் அரசு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ்.

Exit mobile version