நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுக இருக்கும் இதையே வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு, மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது இட ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியோ நாங்கள் உங்களுடைய கூட்டணியில் தொடர்ந்து இருப்பது நீங்கள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டது .முன்னரே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாரான நிலையில், மூன்றாவது முறையாக தமிழக அரசின் சார்பாக சிறப்பு குழு வந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்ததன் விளைவாக நேற்றைய தினம் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
அந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பேச்சுவார்த்தையை தலைமைச் செயலகத்தில் வைத்து பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. அதற்கு ஆளும் தரப்பு முதலில் நாம் பேசி விடலாம் அதன் பிறகு அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்று அதிமுக தெரிவித்திருக்கிறது.
ஆகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாமகவின் மாநில தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ,பேராசிரியர் தீரன் போன்றோர் பங்கேற்றார்கள் .நேற்றைய தினம் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தையின் போது பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 15 அல்லது 16 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் சட்ட ரீதியாக இருந்து வரும் ஒரு சில காரணங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
இறுதியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சமயத்தில் இதனை செய்வது சட்டரீதியாக பல சிக்கல்களை உருவாக்கும். ஆகவே தேர்தல் அறிக்கையில் இதனை நாங்கள் தெரிவித்து விடுகிறோம் அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி விடுகிறோம் என்று அதிமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்சமயம் இதில் முடிவெடுக்க வேண்டிய முக்கிய தருணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.