Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவின் உட்கட்சி தேர்தல்! வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கிட்ட கட்டுரைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எதிரொலித்து இருந்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ்தான் செயல்படும் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து கட்சியின் சட்ட திட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த சட்டத்தின் அடிப்படையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்படும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஒற்றை வாக்கின் மூலமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படி கட்சியின் அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்றவாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் மனுத்தாக்கல் இன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது தேர்தல் ஆணையர்களாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நியமிக்கப்படுகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மூன்றாம் தேதி அதாவது இன்றைய தினம் மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் வேட்புமனுத்தாக்கல் மீதான பரிசீலனை ஐந்தாம் தேதி 11:30 மணி அளவில் நடைபெறும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு 6ம் தேதி மாலை 4 மணி வரையில் கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது தேர்தல் வாக்கு எண்ணிக்கை எட்டாம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரையில் நடைபெறும் தேர்தல் முடிவு அன்றைய தினமே வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தல் எப்படி நடைபெறும் என்று இன்று தேர்வுகளை நடத்தும் பொள்ளாச்சி ஜெயராமன் இடம் விசாரித்தபோது ஜனநாயக ரீதியாக அதிமுகவின் சாதாரண தொண்டர்களும் பங்கேற்கும் விதத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று பதிலளித்தார்.

ஜெயலலிதா இருந்த வரையில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட முன் வந்தது கிடையாது. ஆகவே அவரை போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிகளுக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை எதிர்த்து அதிமுகவில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் போட்டியின்றி இவர்களே இந்த பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

Exit mobile version