Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிபிஐ யிடம் வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs. ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரணை செய்ய உள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தபோது பல பேரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா மூன்று கோடி வசூல் செய்துள்ளார். இதில் கிட்டத்தட்ட 33 பேர் சிக்கி உள்ளனர். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலையில் அந்நபர்கள் இவரை தொடர்ந்து விஜயநல்லதம்பி, மாரியப்பன் உள்ளிட்டோர் மீதும் புகார் அளித்துள்ளனர். இதனால் வசமாக சிக்கிக் கொண்ட ராஜேந்திர பாலாஜி முன்கூட்டியே உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு அளித்தார்

ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை மறுத்து விட்டது. இதனிடையே முன்ஜாமின் கிடைக்காததால் ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் தலைமறைவாகி இருந்துள்ளார். தொடர்ந்து போலீசார் இவருக்கென்று தனி படை அமைத்து தேடி வந்தது. இறுதியில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி மாதமே அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்சமயம் குற்றம் புரிந்த மூவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மேற்கொண்டு இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ தனது தலைமை அலுவலகமான டெல்லிக்கு ராஜேந்திர பாலாஜியை வரவழைக்க சம்மன் அனுப்பி வைக்கப்படும். இதற்கு ஒத்துழைப்பு அழைக்காத பட்சத்தில் கட்டாயம் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார். 

Exit mobile version