Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்க பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்ற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடந்தது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திமுகவின் செயற்குழு கூட்டம் இரண்டாவது முறையாக இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் காலை 10 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், என்று சுமார் 270 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் காலியாக இருக்கின்ற அதிமுக அவைத்தலைவரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படலாம். ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்து வருகிறது.

சென்ற வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கடுமையான கூச்சல், குழப்பம், உண்டானது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கண்டித்து அதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தையும், அவர் விமர்சனம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே நிர்வாகிகளுக்கு இடையே இருந்துவரும் அதிருப்திக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழு இன்று கூடுவதால் இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் கலவரத்தை உண்டாக்கும் என்று தெரிகிறது. சசிகலா விவகாரம் குறித்து உரையாட படலம் எனவும், சொல்லப்படுகிறது. ஆகவே இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கும் ,விறுவிறுப்புக்கும்,பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

Exit mobile version