வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா?

0
148
New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா?

தற்பொழுது திமுக தனது ஆட்சியை நான்கு மாதங்களாக நடத்தி வருகிறது.இவர்கள் தேர்தலின் போது கூறிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை சிறப்புடன் செய்ததாக கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.மீதமுள்ள அறிக்கைகளுயும் கூடிய விரைவில் திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறினார்.அந்தவகையில் சில நாட்களாக மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படுவது தமிழக அரசு செய்த கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவில் வைத்த நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலின் போது கூறினார்.அப்போது ஆளுங்கட்சியில் இருந்தவர்களே நகைகளை வைத்து பல லட்ச பணங்களை பெற்றுள்ளனர்.தற்போது கூட்டுறவு வங்கியில் நகைகளை தமிழக அரசு தள்ளுபடி செய்தததால் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.அந்தவகையில் மாஜி அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான நபருக்கு போலியான நகைகளை வைத்து 267 நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஊழல் செய்தியானது மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.

இந்த புகாரை அடுத்து தள்ளுபடி என்ற அறிவிப்பு வந்தவுடன் பல புகார்கள் எழ ஆரம்பித்துவிட்டது.அதனால் கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கபட்ட அனைத்து கடன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.அதனால் அனைத்து நகை கடன்களையும் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.இந்த ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளனர்.அந்தவகையில் 31.3.2021 வரை உள்ள நகை கடன்களை ஆய்வு நடத்த வேண்டுமென்று கூறியுள்ளனர்.அதனையடுத்து 1.4.2021 அன்று முதல் தற்போது நிலுவையில் உள்ள அனைத்து நகை கடன்களையும் ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.இந்த ஆய்வை 15.11.2021அன்றுக்குள் முடித்து அதற்கான அறிக்கையை சரக துணைப்பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதில் ஊழல் செய்த அனைவரும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி இந்த நகை தள்ளுபடி செயலில் அதிமுக இருந்த போது அதிக உழல் நடிபெற்றது எனவும் அதனை வெளிக்கொண்டு வருவதற்கான  திட்டமாக கூட இது இருக்கலாம் என்றும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.கூட்டுறவு நிறுவனங்களில் 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும், மேலும் 1.4.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களை 100 சதவீதம் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.