Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!

தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து வாக்கு பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு துணை ராணுவ படை, காவல் துறையினர், உள்ளிட்ட பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் எதிர்க்கட்சியான திமுகவைப்பொறுத்த வரையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் ஆளுங்கட்சி சித்து விளையாட்டு விளையாட கூடாது அதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்துங்கள் என்று அவ்வபோது தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் அந்த கட்சியை சார்ந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற 4 சட்டசபைத் தொகுதிகளிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவை நேரடியாக களம் கண்டது. அங்கே இருக்கின்ற தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஒருசிலர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறுகிறார்கள்.

அதாவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த காவல்துறையினரிடம் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பழைய பென்ஷன் திட்டம் மறுபடியும் கொண்டுவரப்படும் எனவே திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்ததாக சொல்கிறார்கள்.

கரூர் சட்டசபை தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராகவும், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் அண்ணாமலைக்கு எதிராகவும், திமுகவினர் தூண்டுதலின் பெயரில் அந்த துறையை சார்ந்த காவல்துறையினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஆகவே அவர்களுடைய பெயர் விவரங்களை ஆளுங்கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் சேகரித்து வைத்திருப்பதாகவும் தெரிகின்றது. ஒருவேளை அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களை துறை ரீதியாக மாற்றம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அதிமுக தலைமை தேர்தல் முடிவு வரும் வரை காத்திருங்கள் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Exit mobile version