கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

0
161

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

சசிகலாவிற்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு அதிமுக அரசு 82 கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் நடத்தி வைக்கின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு மக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் போனதால் பல்வேறு பிரச்சினை, வனமுறைகள் அரங்கேறியது. மக்களின் உணர்வு மற்றும் அதன்படி கொள்கை அமைத்து வென்றால் மட்டுமே மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் சிந்தனை வரும். திமுக தலைவர் ஸ்டாலின், வியாபாரத்தை நோக்கமாக கொண்ட கம்பெனிகளை அழைத்தால் மக்களிடம் ஈர்ப்பு இருக்காது.

தன் கட்சியின் பலத்தின் மூலம் அதிமுகவை வெல்ல முடியாத ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கே போய்விட்டார். இதனால் அவர்கட்சி மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. பிராமணர் பிரசாந்த் கிஷோர் மூலம் அதிமுக அரசை ஒதுக்கி நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். சிறையில் இருக்கும் சசிகலா வெளியில் வர வாய்ப்பு குறைவுதான், அப்படியே வெளியில் வந்தாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்றும், கடை முழுவதும் சாத்தப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.

சசிகலா வெளியில் வருவாரா… அதிமுகவில் அதிகாரம் செய்வாரா என்பதை வரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.