சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!!

0
152

சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!!

1945 ஆம் ஆண்டு ஜனவரி (16) மாதம் எதிரி நாடுகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துக் கொண்டிருந்தன. அடால்ப் ஹிட்லர் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க உருவாக்கப்பட்ட பெர்லின் ஃபியூரர்பங்கர் என்னும் தரையடிச் சுரங்கத்திற்கு சென்றார். அவருடன் மனைவி மகதா, குழந்தைகள், அவரது உதவியாளர்கள் கெப்பல்ஸ், ஈவா பிரவுன், மருத்துவர்கள், பாதுகாப்பு வீரர்கள், தொலைதொடர்பு பணியாளர்கள் உட்பட பலரும் அந்த சுரங்கத்தில் தங்கினர். ஹிட்லர் அங்கிருந்தே போர் குறித்த செய்திகளை அறிந்துகொண்டு தனது உத்தரவின் மூலம் ஜெர்மனியை வழிநடத்தினார்.

1945 ஏப்ரல் 29 அன்று முசோலினி மற்றும் அவரது மனைவியின் மரணம் குறித்தும் அவர்களது உடலுக்கும் ஏற்பட்ட கதியை அறிந்து கொண்டார். ஆனால், இதற்கு முன்பே ஹிட்லர் முடிவு செய்திருந்தார். என் உடலை எதிரிகள் கைப்பற்றிக் கொள்ளவும் அதை ஒரு வெற்றிப்பதக்கமாக கொண்டாட அனுமதிக்க மாட்டேன் என்று “சயனைடை” ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்தார். பங்கருக்கு வந்த நாளில் இருந்தே தற்கொலை எண்ணம் அவருக்கு உதித்துக்கொண்டே இருந்தது.

ஈவா பிரவுனை சுரங்கத்திற்கு வரவேண்டாம் என்று ஹிட்லர் கூறியிருந்தும் கெப்பல்ஸ் உடன் அவரும் சுரங்கத்திற்கு வந்திருந்தார். ஹிட்லரின் பிரத்யேக புகைப்படக் கலைஞரின் உதவியாளராக பணிபுரிந்த ஈவா பிரவுன் அடிக்கடி அவரைச் சந்திக்க தொடல்கினார். முசோலியை போலன்றி, ஹிட்லரின் வாழ்வில் ஈவாவைத் தவிர இன்னொரு பெண் இல்லை. சுரங்கத்திற்கு வந்தபிறகு திருமணத்தை பற்றி ஈவா வைத்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக் கொண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணத்தில் கெப்பல்ஸ் மற்றும் சில நாஜி அலுவலர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். ஹிட்லரும், ஈவாவும் கணவன் மனைவியாக பல மணி நேரங்கள் வாழ்ந்து முடித்த நிலையில், ஜெர்மனியின் படைகள் எந்தெந்த இடத்தில் பின்வாங்கியுள்ளது என்பதையும் இன்னும் எத்தனை நாள் தாக்குபிடிக்கும் என்று தொலைத்தொடர்பு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 1 அல்லது 2 நாட்கள் என்று பதில் வந்தது. இதற்குமேல் தாமதிக்க கூடாது என்று தன்னிடம் இருந்த சயனைடு குப்பிகளை நோக்கினார்.

தன்னிடம் இருக்கும் சயனைடு மாத்திரைகள் ஹிம்லர் எஸ் எஸ் என்ற முன்னாள் துரோகியிடம் இருந்து வந்தவை என்பதால், ஹிம்லரைப் போல் சயனைடும் துரோகம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று தான் வளர்த்த நாய் ஒன்றுக்கு சயனைடை கொடுத்துப் பார்க்கச் சொன்னார். சயனைடை சாப்பிட்ட நாய் ஏமாற்றாமல் இறந்துபோனது. 1945 ஏப்ரல் 30 அன்று மாலை 2 மணிக்கு சுரங்கத்தில் இருந்த உதவியாளர்கள், படை வீரர்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனது இறுதி நாளின் ஏற்பாடுகளுக்கான உத்தரவை பிறப்பித்தார். போதுமான பெட்ரோல் இருக்கிறதா என்று உறுதி செய்யப்பட்டது. மதியம் ஒருமணிக்கே ஹிட்லர் தன் மதிய உணவை முடித்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து வழக்கமான தனது சீருடையில் ஹிட்லரும் ஈவா பிரவுனும் வந்தனர். வெளியே இருந்த கெப்பல்ஸ் மற்றும் மகதாவுடன் கையை குலுக்கிவிட்டு வேகமாக தன் அறைக்குச் சென்றார். கலங்கிய கண்களுடன் ஈவாவை அழைத்துச் சென்று இறுதியாக ஒரு முறை ஹிட்லரை பார்க்க வேண்டும் என்று கேட்டார். அனுமதியும் கிடைத்தது, ஹிட்லரிடம் சென்ற மகதா; நீங்கள் ஏன் பெர்லினை விட்டு தப்பிச்செல்ல கூடாது? என்று கேட்டதற்கு பலமுறை அளிக்கப்பட்ட அதே பதில்தான் மீண்டும் கிடைத்தது. பின்னர் மகதா உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

கெப்பல்ஸ் உட்பட அனைவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். கெப்பல்ஸின் குழந்தைகள் உணவருந்திக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். 10 நிமிடங்கள் ஆகிய பிறகும் சத்தம் எதுவும் கேட்காததால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, ஹிட்லரும், ஈவா பிரவுனும் ஒரு சிறிய சோஃபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஈவா ஹிட்லர் மீது சாய்ந்திருந்தார். ரசாயன வாசம் காற்றில் மிதந்து வந்தன. உயிரற்ற ஹிட்லரின் தலை முன்பக்கமாக சாய்ந்திருந்தது. வலது நெற்றியில் குண்டு பாய்ந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவருடைய காலுக்கு அருகில் 7.65 mm வால்தர் பிஸ்டல் கிடந்தது.