அட்ரா சக்க..!போட்டோ எடுத்தால் 500 ரூபாய் ரொக்கப் பரிசு!!

0
161

அட்ரா சக்க..!போட்டோ எடுத்தால் 500 ரூபாய் ரொக்கப் பரிசு!!

வேலூர் மாநகராட்சியில் குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி ஆகும். மொத்தம் 60 வார்டுகளில் பொது மக்கள் குப்பைகளை வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனியே வைக்க வேண்டும். வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்க வேண்டும்.

ஆனால் பலர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காமல் பொது இடத்தில் அப்படியே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பொது மக்கள் தான்.அவர்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேலூர் மாநகராட்சி 2- வது மண்டலத்திற்க்குட்பட்ட 27 ஆவது வார்டில் உறுப்பினர் சார்பில் நூதனமான விழிப்புணர்வு பலகை ஒன்றை வைக்கப்பட்டுள்ளது.

அதில் மக்கள் அனைவருக்கும் உறைக்கிற மாதிரி ஒரு வார்த்தை எழுதப்பட்டிருந்தது. காசை மட்டுமே கரெக்டா பேங்கில் போடுறிங்க அது மாதிரி குப்பைகளை குப்பை தொட்டியில் போட்டால் என்ன? மீறி குப்பை கொட்டினால் 5000 ரூபாய் அபராதம் எனவும் மேலும் பொது இடத்தில் குப்பையை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் 500 ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 9944581740 என்ற எண்ணில் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் அனைவரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும்.