அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

0
149
Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது.

இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் தெரிவித்தனர். அதன்படி இந்தியன் டூ திரைப்படம்  படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. இந்தப் படம் செம ஹிட் ஆகி திரை திரையுலகுக்கு பெரிய சாதனை படைத்து தந்தது. மேலும் விபத்து கொரோனா போன்ற காரணங்களினால் பல வருடங்களாக முடங்கி இருந்த இந்தியன் டூ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

கமல்ஹாசன் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் டூ திரைப்படம் இருந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இந்தியன் டூ திரைப்படத்தை மீண்டும் துவங்க முயற்சிகள் நடந்துவருகின்றன. உதயநிதி ஸ்டாலின் கூட விக்ரம் பட வெற்றி விழாவில் விரைவில் இந்தியன் டூ பணிகள் துவங்கும் என தெரிவித்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக இந்தியன் டூ படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேக்கப் பணிகளை மேற்கொள்ள நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா செல்லவிருக்கிறாராம்.இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் முதன்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் டூ படத்தை ஷங்கர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கமல் ரசிகர்கள் எதிர்ப்பார்போடு  காத்தியிருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.