ஆப்கன் குழந்தைகள் குறித்து யுனிசெப் அதிர்ச்சித் தகவல்! என்ன தெரியுமா?
ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பு சமீபத்தில் கைப்பற்றியது.இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்பைவாத அமைப்பாகும்.ஷரியத் சட்டங்களை இந்த அமைப்பு கடுமையாக பின்பற்றும் மற்றும் பொதுமக்களையும் பின்பற்ற கட்டாயப்படுத்தும்.இதனால் ஆப்கானிஸ்தானில் பல பொதுமக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.தற்போதும் பலர் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நாட்டின் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் அவர்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்துவர்.மேலும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது எனவும் கட்டளையிட்டனர்.இதனால் அங்கு வாழும் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.தற்போது மிகவும் பதற்றமான சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு தற்போது அதிர்ச்சி அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளது.அந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி குழந்தைகளுக்கு உணவு,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இருப்பதாக கூறியுள்ளது.மேலும் 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.சிகிச்சைகள் முறையாக வழங்காவிட்டால் இன்னும் ஓராண்டுக்குள் இந்த குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் 42 லட்சம் சிறுவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாகவும் அவர்களில் 22 லட்சம் பேர் பெண்கள் எனவும் அந்த அறிக்கையில் யுனிசெப் கூறியுள்ளது.இதனிடையே குழந்தைகளுக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் எனவும் அந்த குழந்தைகளுக்கு உதவுபவர்களை தாலிபான்கள் தடுக்கக் கூடாது எனவும் யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த அறிக்கையின் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.