பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

0
172
Afghan teachers statement about women education

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.மேலும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நாட்டின் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.இத மூலம் தாலிபான் அமைப்பு பல நாடுகளின் எதிர்ப்பைப் பெற்று வருகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.மேலும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு தாலிபான் அமைப்பு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.அமெரிக்க இராணுவமானது ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என தாலிபான் எச்சரித்துள்ளது.அதேபோல் தங்கள் நாட்டில் உள்ள ஆப்கன்கள் ஆகஸ்ட் 31க்கு மேல் வெளியேற அனுமதியில்லை எனவும் கூறியுள்ளது.அரசு பணியாளர்கள் உடனே தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஏற்கனவே தாலிபான் அறிவித்தது.

இந்நிலையில் அந்த நாட்டில் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.இதற்க்கு முந்தைய தாலிபான் ஆட்சியானது பெண்களையும் குழந்தைகளையும் மிகவும் அடிமைப்படுத்தி வைத்திருந்ததாக தகவல் தெரிவிக்கிறது.இதனால் தற்போது பெண்கள் கல்வி மற்றும் வேலைவைப்புகள் குறித்து அங்குள்ள பெண்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்த அச்சத்தால் பெண்களும் அந்த நாட்டை விட்டு கிளம்புவதற்கு தயாராக உள்ளனர்.

இதனிடையே ஆப்கனில் உள்ள ஆசிரியர்கள் பெண்கள் கல்விக்கு நாங்கள் பெரிதும் போராடுவோம்.மேலும் இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கவலையில்லை எனவும் கூறினார்.தாலிபான்கள் ஆண்களுக்கு தனி பள்ளிகளும் பெண்களுக்கு தனி பள்ளிகளும் என்றே இனிமேல் இருக்கும் என்று கூறியுள்ளனர்.தன்னார்வ அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் பெண்களின் கல்விக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது பெண்கள் தங்கள் நாட்டில் பள்ளிக்கு செல்லலாம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் வருங்காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தடுத்தால் தாங்கள் அதை எதிர்த்து போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.