Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல வருடங்களுக்குப் பின்னர் பிரகாஷ்ராஜுடன் ஒன்றினையும் முக்கிய நடிகை!

கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருப்பார். வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். அதன்பிறகு அபியும் நானும் என்ற திரைப்படத்தின் மூலமாக அப்பாவும், மகளுமாக பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

ஒரு அப்பாவுக்கும், மகளுக்கும் இருக்கின்ற அன்பை வெளிக்காட்டும் விதமாக இந்த திரைப்படம் அமைந்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைய இருக்கிறார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். ரகுமான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் ஒன்றிணைந்து இதனை தயாரிக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 500 கோடி அளவிற்கு பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சுந்தரசோழன் மற்றும் குந்தவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது இந்த திரைப்படம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version