Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

#image_title

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.

புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மு.க அழகிரி உட்பட திமுகவைச் சேர்ந்த 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 13 ஆண்டுகளாக தொடரப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது, “மு.க அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை கோவிலுக்குள் செருப்புடன் சென்றதால் வாக்குவாதம் எழுந்து மோதல் ஏற்பட்டது.” என்று சம்பந்தப்பட்ட தாசில்தார் கூறினார்.

இதனையடுத்து 21 பேர் மீது தொடர்ந்த வழக்கில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version