2 மாதத்திற்குப் பின் தொடங்கும் பேருந்து போக்குவரத்து! எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை பேர் தெரியுமா?

0
167

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு இடையே தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி விழுப்புரம் வேலூர் மற்றும் விருதுநகர் இந்த 27 மாவட்டங் களுக்கு இடையே தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மொத்தம் 9333 பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பேருந்துகளிலும் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே வகை மூன்றில் உள்ள சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட் டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியுள்ளது, இன்று முதல் அரியலூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தேனி தென்காசி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவண்ணாமலை தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி விழுப்புரம் வேலூர் மற்றும் விருதுநகர் அங்கே 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நகர மற்றும் மாநகரம் விரைவு பேருந்து அனைத்தும் செயல்பட உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பஸ்களில், மாநகர பஸ்கள் 2,200; விரைவு பஸ்கள் 365 இயக்கப்பட உள்ளன.விழுப்புரம் 2,210; சேலம் 513; கும்பகோணம் 1,592; மதுரை 1,300; திருநெல்வேலி 1,153 பஸ்கள் என, மொத்தம் 9,333 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வரும் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.