1994 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கருத்தம்மா. எத்தனை படம் 1995 காண தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளது.
கருத்தம்மா திரைப்படமானது வணிக ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் ஆண்டின் பிளாக்பஸ்டர் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 5 கோடிகளை வசூலித்தது. அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் தவிர, இப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் , நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது – தமிழ் ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான பல படங்கள் தேசிய விருதை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு பின் இவர் அடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம், மண்வாசனை மாறாமல் படம் எடுக்கக்கூடிய அவருடைய தனித்தன்மையாகும்.
தனித்தன்மையானது 80 – 90களில் மட்டுமே வொர்க் அவுட் ஆனா நிலையில், அதன் பிறகு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதன் மூலம் 22 ஆண்டுகள் திரையுலகில் இருந்து வெற்றி படங்களை கொடுக்காமல் பிரிந்து போய்விட்டார் என்று கூறலாம்.
சில காலம் சின்னத்திரையில் தெற்கத்தி பொண்ணு என்ற தொடர்கதையை நாடகமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய படங்களை அப்டேட் செய்யும் வழக்கமானது பாரதிராஜாவிடம் இல்லாத காரணத்தினால் தான் அவரால் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றி காண முடியவில்லை என்பது பலருடைய கருத்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.