குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

0
219
#image_title

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

நாம் உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் நடந்துக் கொள்வதே வாயுத் தொல்லைக்கு அடிப்படையான காரணம்.

இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே வாயுத் தொல்லையை இல்லாமல் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

1. துளசி

2. இஞ்சி

3. கிராம்பு

4. பெருங்காயம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 200ml தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு துளசி, ஒரு துண்டு இஞ்சி, 4-5 கிராம்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் 100ml தண்ணீர் அளவு சுண்டி வரும் பொழுது பெருங்காயம் சிறிதளவு சேர்த்து, இதனை வடிகட்டி பருகும் பொழுது வாயுத்தொல்லை முற்றிலும் குணமாகும்.

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளுக்கு பெருஞ்சீரகம் ஒரு சிறந்த தீர்வாகும். சிறிதளவு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு பின் மிதமான சூட்டில் அந்த நீரை ஒரு டம்ளர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.