நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவின் புது பட அறிவிப்பு!! 90’ஸ் கிட்ஸ்  VS 2K கிட்ஸ்!!

0
169
After a long time, actor Simbu's new movie announcement

STR: சிம்புவின் புது பட அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். சிலம்பரசன் என்பதை விட தற்போது STR,சிம்பு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவரின் நடிப்பு திறமையால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார். இவர் கடைசியாக கலந்து கொண்ட இசை வெளியீட்டு விழாவில் இனி நான் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடித்து கொண்டே இருப்பேன் ‘இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க’ என்று கூறிய பிறகு இருந்த இடம் தெரியாமல் போனார்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசன் இணைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘thug life’ இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் வளர்ப்பு மகனாக நடிக்க போவதகவும், இவருக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் கூறப்படுகின்றன. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு தனது 48-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ஆனால் இந்த படப்பிடிப்பு துவங்கவில்லை. இதனிடையே (“தம் +மன்மதன்+வல்லவன்+விண்ணைத்தாண்டி வருவாயா=ஜென் இசட்”) வெயிட் பண்ணுங்க டா 2K கிட்ஸ் என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.நேற்று இதன் அறிவிப்பு வெளியானது, இந்த அறிவிப்பில் ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறார். AGS நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.