அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குடிமக்கள்! கனடாவில் பரபரப்பு!

0
131

கனடா நாட்டில் எல்லையை தாண்டி செல்லும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் சுதந்திர அணிவகுப்பு என்ற பெயரில் லாரிகளுடன் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்த போராட்டம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது.

அந்த விதத்தில் நியூசிலாந்தில் அரசின் நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லாரிகள் மற்றும் கார்கள் மூலமாக அணிவகுத்து நாடாளுமன்றம் அமைந்திருக்கின்ற தெருவை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, வெலிங்டன் நகரில் பதற்றம் நீடித்து வருகிறது. அதே போல நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.