Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 படங்கள் இயக்கியதும் அடுத்து குட்பை  தான்!  மாபெரும் வெற்றி  படங்களை  தந்த இயக்குனரின் ஓபன் டாக்!

#image_title

10 படங்கள் இயக்கியதும் அடுத்து குட்பை  தான்!  மாபெரும் வெற்றி  படங்களை  தந்த இயக்குனரின் ஓபன் டாக்! 

தான் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. 10 படங்கள் இயக்கியதும் குட்பை சொல்லி விடுவேன் என்று பிரபல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கைதி, மாஸ்டர், விக்ரம்,  போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ்.  தற்போது மீண்டும் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது,

நான் நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. ந தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சி செய்ததற்காக நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காரணம்  அவ்வளவு எளிதாக எதுவும் நடந்துவிடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உள்ளது.

எனவே இந்த யூனிவர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு  பின்னர் அதிலிருந்து வெளியேறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் லியோ படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் நிறைவடைய உள்ளது. விஜயுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனி வரும் காலங்களில் மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது.  விஜயை மிஸ் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது.

அடுத்ததாக எல்சியு-வுக்கு கீழ் ‘லியோ’ வருமா என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள்” என்று அவர் கூறினார். இதையடுத்து விஜய் நடிப்பில் உருவாகும் லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஐந்தாவது படமாகும்.

 

Exit mobile version