Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை செய்த அடுத்த நிமிடமே கால்வலி காணாமல் போய்விடும்!! யோசிக்காமல் ட்ரை பண்ணுங்க!!

Oplus_131072

அதிக நேரம் நின்றபடி வேலை பார்த்தல்,நீண்ட தூரம் நடத்தல்,உடல் பருமன்,பாதங்களில் காயங்கள்,வீக்கம் போன்ற காரணங்களால் கால் வலி ஏற்படுகிறது.அதேபோல் உடல் எலும்புகள் வலிமை குறைந்தாலும் கால் வலி ஏற்படும்.

கால் வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்:

டிப்ஸ் 1:

தேவையான பொருட்கள்:

1)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.

பிறகு அந்த கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

இதை கால்களில் வலி உள்ள இடத்தில் தேய்த்து ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.இதுபோன்று தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கால்களுக்கு மசாஜ் செய்து வந்தால் கால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

டிப்ஸ் 2:

தேவையான பொருட்கள்:

1)கல் உப்பு – தேவையான அளவு
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

ஒரு அகலமான பாக்கெட்டில் வெந்நீர் ஊற்றி தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.பிறகு அதில் கால்களை வைத்து 10 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

அதன் பின்னர் கால்களை காட்டன் துணியில் துடைத்துவிட்டு இரவு படுக்கச் செல்வதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை கால்களுக்கு அப்ளை செய்யவும்.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் கால் வலி முழுமையாக குணமாகும்.

டிப்ஸ் 3:

தேவையான பொருட்கள்:

1)பாதாம் பருப்பு – ஐந்து
2)வேர்க்கடலை – ஐந்து
3)முந்திரி – ஐந்து
4)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து முந்திரி,ஐந்து பாதாம் பருப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

தற்பொழுது அரைத்த நட்ஸ் பவுடரை பாலில் கொட்டி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.இப்படி தினமும் செய்வதால் கால் வலி விரைவில் குணமாகும்.

Exit mobile version