உடலில் கால்சியம் சத்து இருப்பவர்களுக்கு பருத்திப்பால் சிறந்த தீர்வாக உள்ளது.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியை போக்குவதோடு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த பருத்திப்பாலை சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
பருத்திப் பால் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
*பருத்தி கொட்டை – 100 Gram
*பச்சரிசி – 3 ஸ்பூன்
*சுக்கு – சிறு துண்டு
*தேங்காய் துண்டுகள் – கால் கப்
*வெல்லம் – 300 Gram
பருத்திப் பால் செய்முறை:
1)முதலில் 100 கிராம் அளவிற்கு தரமான பருத்தி கொட்டை வாங்கிக் கொள்ளுங்கள்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஊற விடுங்கள்.பருத்தி கொட்டை நன்றாக ஊறி இருக்க வேண்டும்.
2)அடுத்து ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
3)பிறகு மிக்சர் ஜாரை கழுவி ஊறவைத்த பருத்தி கொட்டையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த பருத்தி பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
4)அடுத்து ஊறவைத்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
5)பிறகு கால் கப் அளவு தேங்காய் துண்டுகளை துருவி வைக்கவும்.அதன் பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
6)இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அரைத்த பருத்திப்பால் மற்றும் அரிசி நீரை சேர்த்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
7)பருத்திப்பாலின் பச்சை வாடை நீங்கியதும் 300 கிராம் அளவிற்கு வெல்லத் தூள் சேர்த்து கரண்டி கொண்டு கலந்துவிடவும்.
8)அடுத்து அதில் வாசனைக்காக சுக்கு தூள் சேர்க்கவும்.விருப்பப்பட்டால் ஏலக்காய் தூளும் சேர்க்கலாம்.இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.அவ்வளவு தான் சுவையான பருத்திப்பால் ரெடி.