விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு!

0
113
#image_title

விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு!

கடந்த மாதம் 28ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை தொடர்ந்து (வியாழன் வெள்ளி சனி, ஞாயிறு திங்கள்)என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட்டது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாகவும் அமைந்தது.இந்த விடுமுறை நாட்களை பலரும் அவர்களது சொந்த ஊர்களில் தான் செலவிட அதிகம் விரும்புவார்கள். தொடர் விடுமுறை காரணமாக குழந்தைகள், வேலைக்கு செல்பவர் என பல பேர் அவர்களது சொந்த ஊருக்கு படை எடுத்தனர்.

இந்த விடுமுறை நாட்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஏராளமானோர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக ஒரே நாளில் ஏராளமான மக்கள், சென்னையில் குவிந்த வண்ணம் காணப்பட்டனர்.இந்தக் கூட்ட நெரிசல் காரணமாக சென்னையில் உள்ள பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்டது.உளுந்தூர்பேட்டை,செங்கல்பட்டு,பரனூர் போன்ற சுங்கச்சாவடிகளில் அதிகளவு வாகனங்கள் வந்ததால் ஏராளமான மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்பட்டது.

கடும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக சில பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் கிடைத்த இடங்களில் அமர்ந்து கொண்டும் நின்று படியும் பயணித்துள்ளனர்.