Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆக்ஷனில் இறங்கும் சூப்பர் ஸ்டார் !

After the surgery, the superstar will get into action!

After the surgery, the superstar will get into action!

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் ரஜினி கதாநாயகனாக  களமிறங்கும் திரைப்படம் தான் “கூலி”. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
விசாகப்பட்டணத்தில் முதற்கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து உள்ளது.    இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா,சோபின் ஷாஹிர், பகத் பாசில், ரேபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதற்கான ஒப்பந்தம் செய்து உள்ளார்கள்.

இந்த  படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஜினி காந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது.

தற்போது வரையிலும் ரஜினி காந்த் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் “கூலி” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பணிகள் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில்  ரஜினி காந்த் பங்கு பெற இருக்கிறார். இதற்காக பிரமாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு, ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

Exit mobile version