இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் மின் வாரிய ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிகாலத்தில் ஊழியர்கள் மரணமடைந்த 101 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகின்றது.
அவர்களில் பத்து பேருக்கு நேற்று பணி நியமனம் நேற்று வழங்கப்பட்டது குறிப்பித்தக்கது.தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 17 பேரும்,இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ஆறு பேரும், மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு 11 பேரும்,களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு 45 பேரும்,தட்டச்சர் பணியிடத்திற்கு மூன்று பேரும்,அலுவலக உதவியாளர் பணிக்கு 5 பேரும்,காவலர் பணியிடதிற்கு 13 பேரும் மற்றும் உதவி வரைவாளர் பணியிடத்திற்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி என பலரும் கலந்து கொண்டனர்.