Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகள் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படம்! ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வம்!

Again a new film directed by daughter! Rajinikanth fans are interested!

Again a new film directed by daughter! Rajinikanth fans are interested!

மகள் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படம்! ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்வம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா.இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்பவர்.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார். இந்த பிரிவானது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவாகரத்துக்குபின் ஐஸ்வர்யா தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அந்த முடிவானது அவர் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.அதற்கான வேலைகளை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகின்றது.

அப்போது அவர் தன்னுடைய மகளின் புதிய படத்திற்கு நான் துணை நிற்கும் வகையில் தான் இந்த படம் நடிக்க சமதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தாயாராகும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது

Exit mobile version