வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தது பாட்டாளி மக்கள் கட்சி. பலகட்ட போராட்டங்களை நடத்திய அந்தக் கட்சி தற்சமயம் தமிழக அரசுக்கு வரும் 3ஆம் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது.
வன்னியர்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். தற்பொழுது அவர் விதித்த கெடு வானது இந்த மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், ஜனவரி மாதம் 25ஆம் தேதி நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்பே அதிமுகவிற்கு எச்சரிக்கை செய்தார் மருத்துவர் ராமதாஸ் .அதன்பிறகு ஆளும் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தை ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
அவர் தெரிவித்தபடி நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், இந்த விஷயம் தொடர்பாக பல முக்கிய சம்பவங்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதுவரையில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பல கட்டப் போராட்டங்கள் நடந்து வந்தது .இதனால் ஆளும் கட்சியான அதிமுகவிற்கும் , பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் சுமார் 6 சதவீத ஓட்டுக்களை தன்வசம் வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியிலிருந்து இழப்பதற்கு ஆளும் தரப்பு தயாராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே தன்னுடைய அமைச்சரவை சகாக்களை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்து விடலாம் என்பதே ஆளுங்கட்சியின் திட்டமாக இருப்பதாக தெரிகிறது.
இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதனை லேசில் விடுவதாக தெரியவில்லை என்று சொல்கிறார்கள். இந்த முறை எப்படியாவது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்து வருகிறார். அதன் காரணமாக அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஆளும் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
என்னதான் எப்படியாவது சமாதானம் செய்து விடலாம் என்று ஆளும் தரப்பு முயற்சி செய்தாலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வதைப்போல பாட்டாளி மக்கள் கட்சியின் அதிரடி என் முன்பு ஆளும் கட்சியால் நிற்க முடியவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
அதன் காரணமாக நிச்சயமாக ஆளும் தரப்பின் சார்பாக இது தொடர்பாக ஒரு நல்ல முடிவு விரைவில் தெரியவரும் என்று சொல்கிறார்கள்.
முன்பே ஒருமுறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி அவர்களின் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் சந்தித்தார்கள் அடுத்தபடியாக ஜனவரி மாதம் பதினோராம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி ,மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி போன்றோர் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சந்திப்புகளின் பொழுது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் அதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ,தைலாபுரம் தோட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோர் திடீரென்று டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அந்த சமயத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகவும், பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி சென்னையில் கலந்து பேசி ஒரு முடிவை எடுக்கலாம் என்று அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மந்திரிகளுடைய இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுடன் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகக் குழுவில் நடந்த விவாதங்களின் இறுதியில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கு பெற்று ஒரு நல்ல தீர்வை காணவேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
ஆகவே நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தமிழக அரசுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படலாம் என்று தெரியவருகிறது. பாட்டாளி, மக்கள் கட்சி எதிர்பார்த்தபடி தமிழக அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்தால் நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கும் முதல்வரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.