Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!!

500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

மீண்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! மதுபிரியர்கள் அவதி!!

நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மதுரை மாநகர அரசு. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் வெகுவிமர்சியாக இன்று தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வலம் வருகின்றனர்.

இந்த தேரோட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மன் அருள் பெற்று வருகின்றனர். இந்த சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு மத்தியில் நாளை அதாவது மே 4ம் தேதி ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version